அய்யனார், அரியநாயகி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா
ADDED :2591 days ago
கடலாடி; கடலாடி அருகே மீனங்குடியில் உள்ள அய்யனார், அரியநாயகி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. திங்களன்று விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராம பூஜாரி சண்முக சுந்தரத்திடம் பிடி மண் வழங்கப்பட்டது.குதிரை, தவளும் பிள்ளை, பைரவர், கருப்பச்சாமி உள்ளிட்ட உருவங்களைவர்ணம் தீட்டி தயார் நிலையில் வைத்திருந்தனர். 300க்கும் மேற்பட்டபொம்மைகளை நேர்த்திக்கடனாக பக்தர்கள் தலையில் சுமந்து, ஊர்வலமாக நகரை வலம் வந்தனர். பெண்கள் பொங்கலிட்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.