சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் இலைக்கழிவுகளால் பக்தர்கள் அவதி
ADDED :2591 days ago
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விசேஷ, திருமண நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். பக்தர்கள் கார்களை நிறுத்த, பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடத்தில், கோவில் திருமண மண்டபம், ஓட்டல் கடைகளில் பயன்படுத்தப்படும் சாப்பாட்டு இலைகளை கொட்டுகின்றனர். குவிந்த இலைகளை உடனடியாக எடுக்காததால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் மூக்கை பொத்தியபடி, அந்த இடத்தை கடக்கின்றனர். கார்களை நிறுத்துவோரும் தவிக்கின்றனர். குப்பை டிரம் வைத்து, இலைக்கழிவுகளை சேகரித்து அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.