உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவி­லில் ஆவணி கிருத்திகை விழா

மயிலம் கோவி­லில் ஆவணி கிருத்திகை விழா

மயிலம்: மயி­லம் வள்ளி, தெய்­வானை, சுப்­ர­ம­ணி­யர் சுவாமி கோவி­லில் ஆவணி கிருத்­திகை விழா­வில் ஏரா­ள­மான பக்­தர்­கள் தரி­ச­னம் செய்­த­னர். அத­னை­யொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்­கப்­பட்டு சுவா­மிக்கு சிறப்பு பூஜை­கள் நடந்­தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளா­கத்­தி­லுள்ள விநா­ய­கர், பால­சித்­தர், வள்ளி, தெய்­வானை சுப்­ர­ம­ணி­யர் சுவா­மிக்கு பால் உள்­ளிட்ட நறு­ம­ணப் பொருட்­க­ளால் மகா அபிேஷ­கம் நடந்­தது.
பெண்­கள், குழந்­தை­கள் என ஏரா­ள­மான பக்­தர்­கள் அல­கு­கள் குத்­திக் கொண்­டும், கோவில் வளா­கத்­தில் அங்­க­பி­ர­தட்­ச­னம் செய்து நேர்த்தி கடன் செலுத்­தி­னர். இரவு 7:00 மணிக்கு வெள்­ளித்­தே­ரில் வள்ளி, தெய்­வானை சமே­த­ராக சுப்­ர­ம­ணி­யர் சுவாமி மலை வலம் வந்­தார். இரவு 9:00 மணிக்கு உற்­ச­வர் மலர் அலங்­கா­ரத்­தில் பக்­தர்­க­ளுக்கு காட்­சி­ய­ளித்­தார். விழா ஏற்­பா­டு­களை மயி­லம் பொம்­ம­புர ஆதீ­னம் 20ம் பட்­டம் சிவ­ஞான பாலய சுவா­மி­கள் செய்­தி­ருந்­தார்.

திருக்கோவிலுார்:  வீரட்­டா­னேஸ்­வ­ரர் கோவி­லில், கிருத்­தி­கையை முன்­னிட்டு, காலை 9:00 மணிக்கு, வள்ளி தேவ­சேனா சமேத சுப்­ர­ம­ணிய சுவா­மிக்கு சிறப்பு அபிேஷ­கத்தை தொடர்ந்து வெள்ளி கவச அலங்­கா­ரம் மகா தீபா­ரா­தனை நடந்­தது. மாலை 6:00 மணிக்கு, அர்ச்­சனை, தீபா­ரா­த­னையை தொடர்ந்து சுவாமி கோவில் உள்­பு­றப்­பாடு நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !