ஆத்தூர் பிரத்யங்கிராதேவிக்கு ஸ்தானுஷ்டமி பூஜை
ADDED :2589 days ago
ஆத்தூர்: ஸ்தானுஷ்டமியை முன்னிட்டு, பிரத்யங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பிரத்யங்கிராதேவி அம்மன், சொர்ண பைரவர் சிலைகள் உள்ளன. நேற்று, ஸ்தானுஷ்டமியை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, யாக குண்டத்தில் வற்றல் மிளகாய், சன்னவதி (98 வகை மூலிகை) வேள்வி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. பிரத்யங்கிராதேவி அம்மனுக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் மற்றும் சொர்ண பைரவர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கல்வியில் மேன்மை பெறவும், துன்பம், நவகிரக தோஷம் விலக வேண்டி நீலகண்டாஷ்டமியில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.