உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மண்ணுக்குள் புதைந்த பம்பை பாலம் கண்டுபிடிப்பு

சபரிமலையில் மண்ணுக்குள் புதைந்த பம்பை பாலம் கண்டுபிடிப்பு

சபரிமலை: அண்மையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் பம்பையில் மண்ணுக்குள் புதைந்த திருவேணி பாலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் புரட்டாசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புஉள்ளது. கேரளாவில் பெய்த பெருமழையில் பம்பை உருக்குலைந்து விட்டது. கடைகள், ஓய்வெடுக்கும் மண்டபம் உள்ளிட்ட பல கட்டடங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

பம்பை ஆற்றை பக்தர்கள் கடந்து செல்லும் திருவேணி பாலம் மற்றும் பெட்ரோல் பங்குக்கு எதிரில் உள்ள நடை பாலம் ஆகியவை மணல் மூடிகிடந்தன. மலைபோல் மண் கிடந்ததால், பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.தற்போது மணலை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது பாலம் பெரிய அளவில் பாதிப்பின்றி அப்படியே இருப்பது தெரியவந்தது.நேற்று (செப்., 3ல்) இதன் வழியாக டிராக்டர் இயக்கி சோதிக்கப்பட்டது.இரண்டாவது பாலத்தை கண்டு பிடிக்க மணல்அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.பாலம் பலமாக இருப்பதால் புரட்டாசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !