வெள்ளிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க மறுப்பது ஏன்?
ADDED :5108 days ago
ஒரு சிலர் தான் இப்படிக் கூறி வருகிறார்கள். வேலை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கும் பொழுது இப்படிக் கூறுவது மிகவும் தவறு. பஸ், மருத்துவமனை, காய்கறி வாங்குதல் போன்ற அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு இப்படிக் கூற முடியுமா? வெள்ளிக்கிழமைகளில் பணப் பெட்டிக்கு பூஜை செய்பவர்கள் அன்றைய தினம் அதிலிருந்து பணம் எடுக்க மாட்டார்கள். முதல் நாளே எடுத்து வைத்து வெள்ளிக்கிழமை கொடுப்பதில் தவறில்லை.