உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் சர்ப்ப விநாயகருக்கு, மவுசு

சென்னையில் சர்ப்ப விநாயகருக்கு, மவுசு

எண்ணூர்:விநாயகர் சதுர்த்திக்காக, எர்ணாவூரில், விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில், சர்ப்ப விநாயகர் சிலைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வரும், 13ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையின் பல்வேறு இடங்களில், விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இதற்காக, மணலி, எர்ணாவூரில், விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள், இரவு, பகலாக நடந்து வருகின்றன.

சிம்மம், மயில், மான், நந்தனம், கமலம், கற்பகம், வில் அம்பு ஏந்திய விநாயகர் என, பலவகையான சிலைகள், அங்கு தயார் செய்யப்பட்டுள்ளன. இதில், காளிங்கர் எனும், சர்ப்ப விநாயகர் சிலைகளுக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.கடந்த ஆண்டு, பாகுபலி, ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகள் போல், இந்த ஆண்டு, பஞ்ச சிங்கமுக விநாயகர் சிலை, புதுவரவாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

பேப்பர் கூழ், கிழங்கு மாவு மற்றும்ரசாயனமில்லா வர்ண பூச்சில் தயாராகியுள்ள விநாயகர் சிலைகள், 3 அடி முதல், 13 அடி உயரமும்; 1,500 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !