அலங்காநல்லூர் நவநீதகிருஷ்ணன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை
ADDED :2651 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே வடுகப்பட்டியில் 134 ஆண்டுகள் பழமைவாய்ந்த நவநீதகிருஷ்ணன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தன. மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு வழிபாடு நடந்தது. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.