சேலம் அழகிரிநாதர் கோயில் உண்டியலில் ரூ.3.45 லட்சம் காணிக்கை
ADDED :2594 days ago
சேலம்: சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், அழகிரிநாதர் கோவிலிலுள்ள, ஐந்து உண்டியல்கள், மூன்று மாதங்களுக்கு பின், நேற்று திறந்து எண்ணப்பட்டது. சேலம், இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் உமாதேவி தலைமை வகித்தார். இதில், மூன்று லட்சத்து, 45 ஆயிரத்து, 809 ரூபாய், 14 கிராம் தங்கம் இருந்தது. இது, கோவில் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்படும்.