ஈரோடு தெப்பக்குளத்தில் மிதக்கும் சப்பரம் சோதனை ஓட்டம்
ஈரோடு: ஈரோடு, புதிய தெப்பக்குளத்தில், மிதக்கும் சப்பரம் சோதனை ஓட்டம் நடந்தது. ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரிஅரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர்
கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில், 49 லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு, புதிய தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழா, தெப்பக்குளத்தின் தடாக விமான கும்பாபிஷேகம் இன்று (செப்.,6ல்) காலை, 5:00 மணிக்கு நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு மேல், தெற்போற்சவம் நடக்கிறது. இதற்காக, பிரத்யேகமாக புதிதாக மிதக்கும் சப்பரம் ஒன்று செய்யப்பட்டது. இரண்டு பேரல்கள், மரப்பலகை, மூங்கில் தப்பைகள் மூலம் தயார் செய்யப்பட்ட மிதக்கும் சப்பரத்தின் சோதனை ஓட்டம் நேற்று (செப்.,5ல்) மதியம் நடந்தது.
ஒருவர் சப்பரத்தில் அமர்ந்து கொள்ள, இருவர் கயிறு சப்பரத்தை இழுத்து வந்தனர். செயல் அலுவலர் கங்காதரன், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.