ப.வேலூர் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
ADDED :2602 days ago
ப.வேலூர்: விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, இந்து முன்னணியினர் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம். ப.வேலூரில் நடந்தது. டி.எஸ்.பி., ராஜு தலைமை வகித்தார். தேவையான
சான்றுகளை பெற வேண்டும். பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலங்களை குறித்த நேரத்தில் தொடங்கி, முடிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு, போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். போலீசார் குறித்து கொடுத்த வழித்தடத்தில்தான் ஊர்வலம் செல்ல வேண்டும். சிலைகளின்
உயரங்கள் குறித்த அளவை விட அதிகமாக இருக்க கூடாது.
ரசாயனம் கலந்த சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கியை உபயோகிக்கக் கூடாது உள்பட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ப.வேலூர், நல்லூர்,
ஜேடர்பாளையம்,பரமத்தி, வேலகவுண்டம்பட்டி ஸ்டேஷன்களைச் சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.