உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் பெரியகாண்டி அம்மன் கோவிலில் இன்று (செப்., 6ல்) கும்பாபிஷேகம்

ராசிபுரம் பெரியகாண்டி அம்மன் கோவிலில் இன்று (செப்., 6ல்) கும்பாபிஷேகம்

ராசிபுரம்: கட்டனாச்சம்பட்டி பெரிய காண்டியம்மன், அண்ணமார்சாமி கோவில் கும்பாபிஷே கத்தையொட்டி, பக்தர்கள் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது.

ராசிபுரம் அடுத்த, கட்டனாச்சம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய காண்டி அம்மன், அண்ணமார் சாமி கோவில்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று (செப்.,6ல்) காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.

முன்னதாக, கடந்த, 4ல் கிராம சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று மதியம், ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து
கோவிலுக்கு சென்றனர். மாலை, 6:00 மணிக்கு மேல், மங்கள வாத்தியம் முதற்கால யாக பூஜைகள் நடந்தன. இன்று (செப்., 6ல்) காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை, 7:35 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, தீபாராதனை,

அன்னதானம் ஆகியவை நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை ஊர் மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !