உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் விநாயகர் சிலை கரைப்பு கலெக்டர் அறிவுரை

நாமக்கல் விநாயகர் சிலை கரைப்பு கலெக்டர் அறிவுரை

நாமக்கல்: தமிழகம், சுற்றுச் சூழலை பாதுகாப்பதில், சிறந்த மாநிலமாக திகழ்கிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும், சிலைகளை கரைத்து, சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை கரைக்க அனுமதி இல்லை. விபரங்களுக்கு, கலெக்டர், மாவட்ட எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு, நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித் துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !