பாலக்காட்டில் செம்பை சங்கீத உற்சவம்
பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 122வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இருநாள் சங்கீத உற்சவம், பாலக்காட்டில் நாளை துவங்குகிறது. பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், நாளை காலை, 11:45 மணிக்கு, கேரள கலாசார துறை அமைச்சர், பாலன் துவக்கி வைக்கிறார். கேரள கலாமண்டலம் துணைவேந்தர் நாராயணன் தலைமை வகிக்கிறார். மதியம், 12:30 மணிக்கு டாக்டர் நர்மதா குழுவினரின் வயலின் கச்சேரி நடக்கிறது.செப்., 9 காலை, 11:45க்கு செம்பை வித்யா பீடத்தின், 33வது ஆண்டு மாநாட்டை பிஜு, எம்.பி., துவக்கி வைக்கிறார். மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். கேரள சங்கீத நாடக அகாடமி செயலர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் கச்சேரி நடக்கிறது.செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை ஸ்ரீநிவாசன், துணைத்தலைவர் சுரேஷ், செயலர் முருகன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.