கிணத்துக்கடவு வடசித்தூரில் கரிவரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி நிதிக்காக காத்திருப்பு
கிணத்துக்கடவு: வடசித்தூரில், பழமையான, கரிவரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
கிணத்துக்கடவு, வடசித்தூரில், 400 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. கோவில் கோபுரம் சுண்ணாம்புக்கல் கொண்டு அமைக்கப்பட்டது. பொலிவிழந்து காட்சி அளிக்கும் கோவிலை புதுப்பிக்க, திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, அரசுக்கு மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். கடந்த ஆண்டு, ஆய்வு மேற்கொண்ட அறநிலை யத் துறை உயர் அதிகாரிகள், கோவில் கோபுர திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித் தனர். ஒட்டுமொத்த கோவில் கட்டடத்தையும் இடித்து விட்டு, புதிதாக திருப்பணி மேற் கொள்ள வேண்டும் என, ஊர்மக்கள் ஆலோசனை வழங்கினர். ஆனால், அதிகாரிகள் இதுவரை ஆய்வுக்கு வரவில்லை. கோவில் திருப்பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இந்நிலையில், நெகமம் நித்தீஸ்வரர் கோவில், மதுரைவீரன் கோவில் உள்பட ஐந்து கோவில் களுக்கு அரசின் பங்களிப்பு தொகை ஒதுக்கீடு செய்து, திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. வடசித்தூர் கரிவரதராஜபெருமாள் கோவில் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத தால் மக்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், திருப்பணிக்கு அனுமதி, நிதி ஒதுக்கீடுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.