கிருஷ்ணராயபுரம் மேட்டுமகாதானபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா
ADDED :2598 days ago
கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரத்தில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டுமகாதானபுரத்தில் மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று (செப்.,6ல்) காலை, 10:00 மணிக்கு நடந்தது. முன்னதாக கடந்த, 4ல் மகாதானபுரம் காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, யாக வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமம் துவங்கி, இரண்டாம் யாக பூஜை செய்யப்பட்டு, மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மேட்டுமகாதானபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.