உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை குலதெய்வங்களுக்கு பெரும் பூஜை விழா

குளித்தலை குலதெய்வங்களுக்கு பெரும் பூஜை விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, பாப்பாக்காப்பட்டி பஞ்.,வாத்தியக் கவுண்டனூர் கருப் பண்ணன் சுவாமிக்கு பெரும் பூஜையை முன்னிட்டு, கடந்த மாதம், 31ல், காகம் குறி பார்க்கப் பட்டது. கடந்த, 4ல், கட்டையன் கூட்டத்து பங்காளி சார்பில் குலதெய்வங் களுக்கு, குளித் தலை காவிரியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

நேற்று முன்தினம் (செப்., 5ல்) இரவு, சரவணபுரத்தில் உள்ள பரமசிவம், பார்வதிக்கு பொங்கல் வைத்து சுத்தபூஜை செய்து, அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று (செப்., 6ல்) இரவு, 12:00 மணியளவில் கட்டையன் கருப்பு சுவாமிக்கு முப்பூஜை நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. இன்று (செப்., 7ல்) காலை, 7:00 மணியளவில் மதுரைவீரன் சுவாமிக்கு பங்காளிகள் பொங்கல் வைத்து, கிடாவெட்டி பூஜை நடைபெறும். பின்னர், பங்காளி குழந்தைகளுக்கு காது குத்து நிகழ்ச்சி நடைபெறும்.ஏற்பாடுகளை டாக்டர் பார்த்தீபன், மாஜி பஞ்.,தலைவர் இளங் குமரன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !