கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :2659 days ago
போடி: பிரதோஷத்தை முன்னிட்டு போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை, நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்கதர்கள் பங்கேற்றனர்.போடி அருகே பிச்சாங்கரை கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ் வரர், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.