உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகாரில், கணபதி தரிசனம் கண்காட்சி

சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகாரில், கணபதி தரிசனம் கண்காட்சி

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில், கணபதி தரிசனம் எனும் பெயரில், கண்காட்சி துவக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 1973ல் நிறுவிய பூம்புகார் விற்பனையகம், கைவினைப் பொருட்கள் உலகில் தனியிடம் பிடித்துள்ளது.இதன் சார்பில், தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு, கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூம்புகார் சார்பில் கண்காட்சி

நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கணபதி தரிசனம் எனும் பெயரிலான கண்காட்சியை, சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் துவக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, களிமண், காகிதக் கூழ், பளிங்குதூள், மரம், கருங்கல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பலவகை விநாயகர் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, அனைத்து வகை பொம்மைகளுக்கும், 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்., 14ம் தேதி வரை நடத்தப்படும் இந்த காண்காட்சிக்கு, பார்வையாளர்கள், தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !