நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா
ADDED :5001 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லுக்கு இறைவன் வேலியிட்ட திருவிளையாடல் காட்சி நெல்லையப்பர் கோயிலில் நேற்று நடந்தது.நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத்திருவிழா நடந்துவருகிறது. விழாவில் 4வது நாளான நேற்று திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல்லுக்கு இறைவன் வேலியிட்ட திருநாள் கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமி, சன்னதி கொடிமர மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகமும், பஞ்ச மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகமும் நடந்தது. நிகழ்ச்சியினை நெல்லையப்பர் கோயில் பட்டர்கள் லோகநாதன், கார்த்திக் முன்னின்று நடத்தினர். இரவில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் ரதவீதிகளில் பவனி நடந்தது.