ஈரோட்டில் அமல அன்னை ஆலயத்தில் தேர்பவனி
ADDED :2838 days ago
ஈரோடு: அமல அன்னை ஆலயத்தில், மேரி மாதா தேர்பவனி நடந்தது. ஏராளமான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு, பி.எஸ்.,பார்க் அருகே, அமல அன்னை ஆலயத்தில், அன்னை மேரி பிறந்த நாள் விழா நேற்று (செப்., 9ல்) நடந்தது. பங்குத்தந்தை ஜான் சேவியர் குழந்தை தலைமை வகித்தார். விழாவில், திருப்பலி, அமல அன்னை தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அமல அன்னை மேரி மாதா வீற்றிருக்க, முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. இதில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாடல்களை பாடி ஜெபம் செய்தனர்.