நலம் தரும் நவக்கிரக விநாயகர்
ADDED :2629 days ago
குரு, சனி, போன்ற கிரகப்பெயர்ச்சி சாதகமாக இல்லாவிட்டால் அதிலிருந்து நம்மை விடுவித்து காப்பவர் நவக்கிரக விநாயகர். இவரது உடம்பில் நவக்கிரக நாயகர்கள் அடங்கியுள்ளனர். கிரகதோஷம் அகல இவரை விநாயகர் சதுர்த்தியன்று வழிபடுவது சிறப்பு. இவரது நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், தலையில் குரு, இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல்கையில் சனி, இடது மேல்கையில் ராகு, இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர்.