நட்பிற்கு அளவு அவசியம்
நண்பர்களோ, உறவினர்களோ...யாராக இருந்தாலும், அவர்களது வீட்டுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஒரு வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு நம் மீது சலிப்பு ஏற்பட்டு விடும். ஒரு நண்பரின் இல்லத்திற்கு வந்த தம்பதி, நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். தாங்களும் அந்த ஊருக்கே மாற்றலாகி வந்து விட்டதாகவும், தாங்கள் வாடகை வீட்டுக்காக அலைந்த கதை, குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்க்க பட்டபாடு, குடிதண்ணீருக்கு தெருத்தெருவாக குடங்களுடன் அலைந்த கதை என மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரம் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர், அவர்களின் அறுவைக் கச்சேரி தொடரவே சலிப்புக்குள்ளானார். ஒரு கட்டத்தில் வெறுப்புடன், ‘சரி...எனக்கு தூக்கம் வந்து விட்டது. நீங்கள் கிளம்புகிறீர்களா?” என்று கேட்டு விட்டார். தம்பதிகளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நண்பர்களின் வீட்டுக்கு அடிக்கடி வரவும் கூடாது. அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கவும் கூடாது. “உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காத படிக்கு அடிக்கடி அவன் வீட்டில் காலை வைக்காதே” என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது.