/
கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை; காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
சிங்கம்புணரி சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை; காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :353 days ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாஷ ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு யாகவேள்வி நடத்தப்பட்டு 6 அடி உயர வடுக பைரவருக்கு அபிஷேகங்கள், வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் வடுகபைரவருக்கும், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் காலபைரவருக்கும் கிராம மக்கள் சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.