உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககிரி, மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்

சங்ககிரி, மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்

சங்ககிரி: சங்ககிரி, மோரூர் கிழக்கு ஊராட்சி, புள்ளிபாளையம் மாரியம்மன் கோவிலில், கணபதி, மாரியம்மன், பாண்டுரங்கன், மேச்சேரி அம்மன் சுவாமிகளுக்கு, நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீரை எடுத்து, திருச்செங்கோடு சாலையில் இருந்து, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். நேற்று காலை, மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை காலை, 4:30 மணிக்கு, நான்காம் கால பூஜை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !