புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் ஆவணி அவிட்டம்
ADDED :2583 days ago
புதுச்சேரி:புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் மற்றும் கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில், சாமவேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் மற்றும் கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில், சாமவேத உபாகர்மா எனப்படும் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி, நேற்று (செப்., 11ல்) காலை 10.00 மணிக்கு நடந்தது.கீதாராம சாஸ்திரி தலைமையில் வேதபுரீஸ்வரர் கோவிலிலும், வேதசாம்ராட் ராஜா சாஸ்திரி தலைமையில் கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்திலும், சாமவேதத்தை சேர்ந்த பிராமணர்கள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, மகா சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாக வாகனம், ரிஷி பூஜை, தர்ப்பணம், கலச பூஜை, ஹோமம் வேதாரம்பம் நடந்தது.