உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேனியர்குடி காளியம்மன் கோயில் வருடாந்திர உற்ஸவ விழா நடந்தது.மூலஸ்தான பீட வழிபாட்டுடன் விழா துவங்கியது. பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் ஊர்வலமாக பெரிய ஊரணிக் கரைக்கு சென்று கரகத்தில் அம்மனை செய்து எடுத்து வந்தனர். 2ம் நாளில் பெண்கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மாலையில் மஞ்சள் நீராட்டு வைபவமும், பக்தர்களின் முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இறுதி நிகழ்ச்சியாக அம்மனை கரைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அம்மன் மீது பூக்களைதூவி பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர். சேனியர்குடி வெள்ளாளர் சமுதாய தலைவர் சுந்தரம், செயலாளர் சக்திவேல், பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !