உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் கோவில்களில் திரளாக பக்தர்கள் தரிசனம்

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் கோவில்களில் திரளாக பக்தர்கள் தரிசனம்

உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி விநாயகர் கோவில்களில், சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில், அதிகாலையில், ஹோம பூஜை நடந்தது.

கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் படைத்து, வழிபாடு நடந்தது. காலையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. ஐஸ்வர்யா நகர், கற்பக விநாயகர் கோவில், காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.

ஜி.டி.வி.,லே அவுட் செல்வவிநாயகர் கோவிலில், 21 வகையான பூக்கள் மற்றும் இலைகளில் அர்ச்சனை நடந்தது. உடுமலை, குட்டைதிடல் விநாயகர் கோவில், தில்லைநகர் ரத்னலிங் கேஸ்வரர் கோவில், சக்தி விநாயகர் கோவில், சத்திரம் வீதி சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் சதுர்த்தி விழா கோலாகலமாய் நடந்தது. பக்தர்கள் திரளாக சென்று வழிபட்டனர்.

சிலைகள் பிரதிஷ்டை இந்து முன்னணி சார்பில், உடுமலை நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில், 180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியத்தில், 33 சிலைகளும், மடத்துக்குளம் ஒன்றியத்தில், 119 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

வி.எச்.பி., தமிழகம், இந்து மக்கள் கட்சி, இந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், 350க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று 13ல், பிரதிஷ்டை செய்யப்பட்டது. உடுமலை மேற்கு ஒன்றிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று 14ல், விசர்ஜனம் செய்யப்படுகிறது.

மடத்துக்குளம், கொமரலிங்கம், கணியூர், துங்காவி பகுதியில், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், இந்தாண்டு, 93 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !