கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா துவக்கம்
ADDED :2578 days ago
கரூர்: கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
கரூர், தான்தோன்றிமலையில், தென் திருப்பதி எனப்படும், கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத தேர்த்திருவிழா, நேற்று (செப்., 13ல்) கொடியேற்ற த்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை ஒட்டி தினந் தோறும் பல்வேறு வாகனங்களில், நம்பெருமாள் வீதியுலா நடக்கிறது. வரும், 19ல் மாலை, 4:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 21ல் நம்பெருமாள் திருத்தேரின் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
விழா நிறைவு நாளில், புஷ்ப பல்லகில் நம் பெருமாள் எழுந்தருள்வார். விழா ஏற்பாடுகளை திருச்சி இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் சூரியநாராயணன், செயல் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்துள்ளனர்.