குளித்தலை கோட்ட பகுதியில் 145 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
குளித்தலை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, குளித்தலை கோட்ட பகுதியில், 145 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குளித்தலையில், 59, லாலாபேட்டையில், 13, மாயனூரில், 14, தோகைமலையில், 36, சிந்தாமணிபட்டியில், 13, பாலவிடுதியில், 10, என, 145 சிலைகள், போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று (செப்., 13ல்) மாலையே, 11 சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப் பட்டன. இரண்டாம் நாளான இன்று (செப்.,14ல்), எட்டு சிலைகள், மூன்றாம் நாளான நாளை (செப்.,15ல்), 126 சிலைகள் போலீசார் பாதுகாப்புடன், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் கரைக்கப்படவுள்ளன. மக்கள், இந்து முன்னணி, பா.ஜ., கட்சிகள் சார்பில், இந்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று (செப்., 13ல்) சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள், அப்பகுதி மக்கள் சிலைகளை வழங்கினர்.