வடமதுரை குமரம்பட்டி கரடிகருப்பு கோயிலில் மழை வேண்டி கூட்டு வழிபாடு
ADDED :2627 days ago
வடமதுரை: அய்யலூர் அருகேயுள்ள சுக்காவளி, தங்கம்மாபட்டி புதூர், புதுவாடி, மீனாட்சியூர், குமரம்பட்டி பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யவில்லை.
இதனால் விவசாயம் பொய்த்து நிலங்கள் பெரும்பாலும் வெறுமனே உள்ளன. குடிநீர் பற்றாக்குறையாலும் மக்கள் தவிக்கின்றனர்.
இதனால் மழை வேண்டி குமரம்பட்டி கரடிகருப்பு கோயிலில் கூட்டு வழிபாடு நடத்தினர். வழிபாடை தொடர்ந்து 16 ஆட்டு கிடாய்கள் வெட்டி பொது விருந்தும் நடந்தது. சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.