கன்னிவாடி கசவனம்பட்டி அருகே சவடம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2579 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி அருகே கொரலம்பட்டியில், சவடம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காளியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு துவங்கியது.
விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, வேதிகா, சோமகும்ப பூஜை நடந்தது. இரண்டு கால யாக பூஜைகளுக்குப்பின், யாத்ரதானம் நடந்தது. விசேஷ பூஜைகளுடன், கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
மூலவர், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.