உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரிஎஸ்.கோவில்பட்டியில் செகுட்டையனார் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரிஎஸ்.கோவில்பட்டியில் செகுட்டையனார் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டியில் செகுட்டை யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.செப். 10 ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால பூஜையாக நடந்தது. நேற்று (செப்., 13ல்) காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து சென்றனர். காலை 10:00 மணிக்கு செகுட்டை யனாருக்கும், கருப்பர் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தான மதுராந்தகி நாச்சியார், கோயில் கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !