சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைக்க 10 இடங்களில் அனுமதி
ADDED :2579 days ago
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டன.சிவகங்கை இந்திராநகர், வாணியங்குடி, காளையார்கோவில் தெப்பக்குளம் கீழ்புறம், மானாமதுரை அலங்காரக்குளம், தேவகோட்டை கருத்தூரணி, திருப்புத்தூர் சங்கீ யாண்டி கோயில் ஊரணி, கல்லல் தெப்பக்குளம், காரைக்குடி கீழ்ஊரணி, சோளாங்குளம் (சாக்கோட்டை) ஸ்ரீ வீரசேகர உமையாம்பிகை கோயில் எதிர்புறம்,சிங்கம்புணரி சேவுகர்மூர்த்தி கோயில் தெப்பம், நாகமங்கலம் (சிங்கம்புணரி) வெள்ளைப்பள்ளம் ஊரணி ஆகிய இடங்களில் கரைக்கலாம். மேலும் களிமண்ணால் செய்த சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டுமென, கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.