உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு மடப்புரம் பத்ரகாளியம்மன் வழிபாட்டு யாத்திரை

வத்திராயிருப்பு மடப்புரம் பத்ரகாளியம்மன் வழிபாட்டு யாத்திரை

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு நாடார் உறவின் முறையினர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு யாத்திரை சென்று பெரும்பூஜை வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு 107 வது பெரும்பூஜை நிகழ்வுகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்டகுடும்பங்களை சேர்ந்த பக்தர்கள் மடப்புரம் யாத்திரை மேற்கொண்டனர்.

முதல்நாள் வத்திராயிருப்பு காளியம்மன் கோயிலில் கூழ் காய்ச்சி வழிபாடு செய்தனர் 2 ம் நாளில் யாத்திரை புறப்பாடு துவங்கியது. 3 ம் நாளில் அம்மனுக்கும், அய்யனாருக்கும் பெரும்பூஜை வழிபாடு, மாவிளக்கு வழிபாடு, பொங்கலிட்டு படையல் வழிபாடு செய்தனர்.
3 ம் நாளில் நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்து ஊர் திரும்பினர்.

பள்ளயம் பிரித்தலும், பிரசாதம் வழங்கலும் நடந்தது. சமுதாய தலைவர் குருவையா, செயலாளர் பச்சப்பழம், பொருளாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !