வேலூர் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் கலெக்டர் ஆய்வு
ADDED :2626 days ago
வேலூர்: விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தை, கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று (செப்.,13ல்) துவங்கியது. வேலூரில் வரும், 15ல் விநாயகர் சிலை ஊர்வலமாக சென்று, சதுப்பேரியில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை, கலெக்டர் ராமன், நேற்று (செப்., 13ல்) ஆய்வு செய்தார். அப்போது, சிலைகளை பாதுகாப்பாக கரைக்க ஏற்பாடு செய்யும்படி, அதிகாரிகளுக்கு,அவர் உத்தர விட்டார்.