உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாஜாபேட்டையில் கோவிலை புதுப்பித்தபோது 2 சிலைகள் கண்டுபிடிப்பு

வாலாஜாபேட்டையில் கோவிலை புதுப்பித்தபோது 2 சிலைகள் கண்டுபிடிப்பு

வாலாஜாபேட்டை: கோவிலை புதுப்பித்தபோது, இரண்டு ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டன. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த, மேல்பாடியில், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், நூற்றாண்டு பழமையான பெருமாள் கோவில், சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கோவிலை சீரமைத்து, வழிபாடு நடத்த மக்கள் முடிவு செய்தனர். இதற்காக வளாகத்தின், ஒரு பகுதியை, பொக்லைன் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது, மண்ணில் புதைந்திருந்த, இரண்டு சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சுத்தம் செய்து பார்த்ததில்,ஐம்பொன்னா லான, ஒரு அடி உயரம், மூன்று கிலோ எடையுள்ள பெருமாள் சிலை, ஒரு அடி உயரம், இரண்டு கிலோ எடையுள்ள கருடாழ்வார் சிலை என்று, தெரிய வந்தது. மரத்தடியில் சிலைகளை வைத்து, மக்கள் வழிபாடு செய்தனர். இதுகுறித்து, திருவலம் வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !