காஞ்சிபுரம் மேலக்கோட்டையூர், மேகநாதேஸ்வரர் கோவிலில் விநாயகருக்கு 1,008 லட்டு அர்ச்சனை
காஞ்சிபுரம்: மேலக்கோட்டையூர், மேகநாதேஸ்வரர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை யொட்டி, 1,008 லட்டு படைக்கப்பட்டு, சஹஸ்ரநாம பூஜையும் நடந்தது.
வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில், 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷம் தோறும் இக்கோவிலில், 108 சங்கா பிஷேகம் நடைபெறுகிறது.திருமண தடை, குழந்தை பேறு, பதவி உயர்வு, உடல் நோய் நீங்க, பிரதோஷ தினத்தன்று பரிகாரம் செய்து, பக்தர்கள் வழிபடுகின்றனர்.இக்கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று (செப்.,13ல்) விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நேற்று (செப்.,13ல்) காலை, 7:30 மணிக்கு, மஹா கணபதி ஹோமமும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, 1,008 லட்டு படைக்கப்பட்டு, சஹஸ்ரநாம அர்ச்சனை யும், மகா தீபாரா தனையும் நடந்தது.மேலக்கோட்டையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், திரளாக பங்கேற்று வழிபட்டனர்.