உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில்,சங்கர நாராயணர் கோவிலில் விமரிசை

காஞ்சிபுரம் திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில்,சங்கர நாராயணர் கோவிலில் விமரிசை

காஞ்சிபுரம்: திருப்போரூர் அடுத்த, காட்டாம்பலி கிராமம் என அழைக்கப்படும் புதுப்பாக்கத்தில், சங்கர நாராயணர் கோவில் உள்ளது.இக்கோவிலில், நர்த்தன விநாயர், தட்சணாமூர்த்தி, முனீஸ் வரர், விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சாய்பாபா, அலமேலு சமேத வெங்கடேச பெருமாளுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, நர்த்தன விநாயகருக்கு, நேற்று (செப்., 13ல்) காலை, சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தூப தீப ஆராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில், நர்த்தன விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், புதுப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி, கே.பி.கந்தசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !