போடி கோயிலில் சங்கரநாராயணன் சிலை பிரதிஷ்டை
ADDED :2625 days ago
போடி: போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒரே கல்லில் சிவனும், திருமாலும் இணைந்த சங்கரநாராயணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சங்கரநாராயணனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் கோயில் தலைவர் முத்துச்சாமி தலைமையில் நடந்தது. செயலாளர் போஸ், பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சேகர் செய்திருந்தார்.