உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் விநாயகர் சிலைகள் வைகையில் கரைப்பு

மதுரையில் விநாயகர் சிலைகள் வைகையில் கரைப்பு

மதுரை: மதுரையில் இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் சேனை சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்பட்டன.சதுர்த்தியையொட்டி நகரில் ஆங்காங்கு விநாயகர் சிலைகள் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன.

இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் சேனை சார்பில் முப்பது இடங்களில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் நேற்று (செப்.,14ல்) கீழ மாசி வீதி மொட்டை விநாயகர் கோயிலுக்கு கொண்டு
வரப்பட்டன.

பின் அங்கிருந்து அவை ஊர்வலமாக நான்கு மாசி வீதிகள் வழியாக யானைக்கல் வைகை ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இதையொட்டி ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இன்றும் (செப்., 15) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !