விருதுநகரில் விநாயகர் ஊர்வலம்
ADDED :2945 days ago
விருதுநகர்:அருப்புக்கோட்டையில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னி ட்டு விநாயகர் ஊர்வலம் நடந்தது. நகர் முழுவதும் இருந்து 13 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு, அருப்புக்கோட்டை பெரியகுளம் கண்மாயில் கரைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அருப்புக்கோட்டை- பந்தல்குடி ரோட்டில் ஹிந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டமும் நடந்தது.