பொள்ளாச்சி சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2624 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி காலை, 7:00 மணிக்கு, விசேஷ ஜபம், பாராயணம், அஷ்ட திரவிய திரிஸதி ேஹாமம், அஷ்டாபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விநாயகப்பெருமான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில் சந்தன காப்பு அலங்காரம், விநாயகர் திருவீதி உலா, மகாதீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன.