மானாமதுரையில் விநாயகர் விஜர்சன விழா
ADDED :2624 days ago
மானாமதுரை:மானாமதுரையில் இந்து முன்னணி சார்பில் 25 ம் ஆண்டு விநாயகர் விஜர்சன விழா மாவட்ட செயற்குழுஉறுப்பினர் குப்புச்சாமி தலைமையில் நடந்தது.நகர் தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
துணைத்தலைவர் கருப்புச்சாமி வரவேற்றார்.பா.ஜ.,தேசிய செயலாளர் எச்.ராஜா கொடி அசைத்து விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழாவில் பி.எம்.எஸ் மாநிலஅமைப்பாளர் தங்கராஜ்,மாநில நிர்வாக குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்டத்தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் கண்ணன், நகரதலைவர் சங்கர சுப்பிரமணியன்,இளைஞரணி தலைவர் வெங்கடேஷ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.