உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரமேரூர் தர்மராஜா கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் தர்மராஜா கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர்"திணையாம்பூண்டி, தர்மராஜா கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நேற்று (செப்., 14ல்) கோலாகலமாக நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்டது திணையாம்பூண்டி. இப் பகுதியில், பழமையான திரவுபதி சமேத தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவில் கட்டடம், நாளுக்கு நாள் பழுதடைந்து வந்த நிலையில், சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க, அப்பகுதி வாசிகள் தீர்மானித்தனர்.அதன் அடிப்படையில், நன்கொடை வசூல் மூலம், கடந்த சில மாதங்களாக கோவில் சீரமைப்பு பணி நடந்து வந்தது.

பணி முழுமையாக நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று (செப்.,14ல்) காலை, 6:00 கும்பாபிஷேக பூஜைகள் துவங்கி, 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !