திருக்கோவிலுாரில் கஞ்சி கலய ஊர்வலம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு செய்தனர். திருக்கோவிலுார், என்.ஜி.ஜி.ஓ., நகர், மேல்மருவத்துார் ஓம் சக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், நேற்று பக்தர்கள் கஞ்சி கலையம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 11:00 மணிக்கு, வேண்டுதல் உள்ள பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்து கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தெய்வமணி முன்னிலை வகித்தார். பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் படைக்கப்பட்டு கஞ்சி பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. மன்ற செயலர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.