பெரியபட்டினம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகம்
பெரியபட்டினம்:ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு செப்.15ல் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை சபரிமலை தலைமைக்குருக்கள் கண்டரரு ராஜீவரு தலைமை யில்நடந்தது. முதலாம் ஆண்டு வருடாபி ஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிய ளவில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் செய்து சிவ, ஹரி, ஐயப்பன் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. ஐயப்ப பக்தர்கள் பஜனை செய்தனர்.
10 விதமான சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நிகழ்த்தப்பட்டது. ஸ்ரீவல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்ச மாதா, வல்லபேஸ்வரர், சங்கரன், சங்கரி, ஆஞ்சநேயர் மற்றும் தங்கமூலாம் பூசப்பட்ட கொடிமரம், பரிவார தெய்வங்களுக்குசிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப் பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சபரியாத்திரை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிட வேண்டியும், உலக நன்மைக்கான கூட்டுப்பிரார்த்தனையும் நிறைவேற்றப்பட்டது.
அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைமை குருசாமி மோகன் சுவாமி, ரெகுநாத புரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.