கரூர் ஐயப்பன் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி
ADDED :2576 days ago
கரூர்: அகில பாரத ஐயப்ப தர்ம பிரசார சபா சார்பில், கரூர் வாசவி மஹாலில், ஐயப்பன் சுவாமிக்கு ஏழாம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா நேற்று(செப்., 16ல்) நடந்தது.
கடந்த, 14 இரவு, மங்கள விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மதியம்(செப்.,15ல்) சுவாமிக்கு மஹா அபிஷேகம், 108 கலச பூஜைகள் நடந்தன. இரவு, சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று (செப்.,16ல்) காலை, 11:00 மணிக்கு, ஐயப்ப சுவாமி க்கு, சகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.