ஈரோடு அரங்கநாதர் கோவிலில் நாளை(செப்.,18ல்) கருடசேவை
ADDED :2680 days ago
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், தேர்த்திருவிழா கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனுமந்த வாகனத்தில், இன்று இரவு(செப்.,17ல்) எழுந்தருளுகிறார். முக்கிய நிகழ்வான கருடசேவை நாளை (செப்.,18ல்)நடக்கிறது.
அதிகாலை யாகசாலை பூஜை, திருமஞ்சனம், இரவில் கருட சேவை நடக்கிறது. ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறையை பின்பற்றி நடக்கும் விழாவில், பக்தர்கள் கட்டளை செலுத்தி, பங்கேற்கலாம். வரும், 20ல், திருக்கல்யாண உற்சவம், 21ல் தேரோட்டம் நடக்கிறது.