வேலூர் திரவுபதியம்மன் கோவிலில் நவக்கிரக சிலைகள் உடைப்பு
ADDED :2575 days ago
வேலூர்: திரவுபதியம்மன் கோவிலில், சிலைகளை உடைத்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த, தெள்ளூரில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியே நந்தி, நவக்கிரக சிலைகள் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த பூசாரி கண்ணன், 55, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் கோவிலை திறந்து பூஜைகள் செய்வார். நேற்று காலை, 10:00 மணிக்கு பூசாரி கண்ணன் வந்த போது, நவக்கிரக சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது. புகார்படி, அரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.